×

இளையான்குடி ரேஷன்கடையில் பொங்கல் பொருட்கள் விநியோகம்

இளையான்குடி, ஜன.10:  தமிழக அரசு சார்பில் பொங்கலை முன்னிட்டு இளையான்குடி, சாலைக்கிராமம்,  தாயமங்கலம், சூராணம், முனைவென்றி, பகுதிகள் உட்பட தாலுகாவில் 84 ரேசன் கடைகளில் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரேசன் கார்டு முறைப்படி முந்திரி, உலர் திராட்சை, கரும்பு, சீனி, அரிசி  விகிதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் விநியோகம் செய்யப்பட்ட இந்த இலவச பொங்கல் பரிசுப் பொருட்களை, அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  இளையான்குடி அருகே கண்ணமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தமிழரசன், ரேசன்கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கினார். கவுன்சிலர் மகேஸ்வரி திருமூர்த்தி கலந்துகொன்டார். வடக்கு சாலைக்கிராமம் ரேசன் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ரெத்தினம் பரிசுப் பொருட்களை வழங்கினார். அரணையூர் ரேசன் கடையில், ஊராட்சி மன்றத் தலைவர் முனீஸ்வரி இலவச பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கினார்.

Tags : ration shop ,
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா