ஓசூர், ஜன.10: ஓசூர் காந்தி சாலையில் கன்னிகா பரமேஷ்வரி கோயில் உள்ளது. இதன் அருகே, நேற்று ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் பூர்வக ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஐயப்பனை அலங்கரித்து 18 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் 108 சங்குகளால் சிறப்பு பூஜை, மஹன்யாச பூர்வக ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.