×

மாவட்ட ஊராட்சி, ஒன்றியம் தலைவர், துணைதலைவர் வேட்பாளர் பட்டியல்: தி,மு.க., வெளியீடு

ஊட்டி, ஜன.10: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் நான்கு ஊராட்சி ஒன்றியல்களில் திமுக., சார்பில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக., மாவட்ட செயலாளர் முபாரக் கூறியுள்ளதாவது:  நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் திமுக., தலைவர் ஸ்டாலின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது. இதன்படி, மாவட்ட ஊராட்சிக்கு தலைவர் பதவிக்கு பொன்தோஸ், துணைத் தலைவர் பதவிக்கு ராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு தலைவர் பதவிக்கு காமராஜ், துணைத் தலைவர் பதவிக்கு சித்ராவிம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு கீர்்த்தனா, துணைத் தலைவர் பதவிக்கு தாமோதரனும், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு சுனிதாவும், துணைத் தலைவர் பதவிக்கு நாகேஷ்வரியும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில், தலைவர் பதவிக்கு ராம்குமாரும், துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியை ேசர்ந்த கிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுவார்கள். இவ்வாறு முபாரக் கூறியுள்ளார்.

Tags : District Panel ,President ,Union ,MK ,
× RELATED விவசாயிகளின் எந்த எதிர்பார்ப்பையும்...