×

தாம்பரம் அருகே உள்ள ஆசிரமத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை புகார்: போலீசார் விசாரணை

தாம்பரம், ஜன. 10: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் ஒரு ஆசிரமம் இயங்கி வருகிறது. இங்கு, சட்டவிரோதமாக 9 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு தொல்லைகள் கொடுக்கப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் புகார் எழுந்தது.இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரமத்துக்கு நேற்று முன்தினம் காஞ்சிபுரம் குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் சென்றனர். அங்கு சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 9 சிறுவர்களை மீட்டு, தாம்பரத்தில் உள்ள அரசு சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

புகாரின் பேரில் தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரம வட்டாரத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அந்த ஆசிரமத்தில் இருந்த 9 சிறுவர்களுக்கு எவ்வித பாலியல் தொல்லையும் நடைபெறவில்லை. இதுகுறித்து பொய் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அச்சிறுவர்களின் பெற்றோர் கடிதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : sexual harassment ,boys ,ashram ,Police investigation ,Tambaram ,
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு