×

25 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அனைத்து மாவட்ட மேலாளர்களிடம் விவரம் கேட்டு கடிதம்

வேலூர், ஜன.10: 25 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜனவரி மாத இறுதிக்குள் சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்களை அனுப்பி வைக்குமாறு டாஸ்மாக் மாநில நிர்வாகம் அனைத்து மண்டல முதன்மை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 6,800 டாஸ்மாக் சில்லரை மது விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளில் கண்காணிப்பாளர், விற்பனையாளர், உதவியாளர் என மொத்தம் 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 1200 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த வகையில் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் ஊக்கத்தொகை வழங்குவதற்காக கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, டாஸ்மாக் கடை கண்காணிப்பாளர்களுக்கு ₹3 ஆயிரமும், விற்பனையாளருக்கு ₹1,000ம், உதவியாளருக்கு ₹750 என ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவைப்படும் நிதி குறித்த விவரங்களை ஒரு வார காலத்துக்குள் அனுப்பி வைக்கும்படி டாஸ்மாக் மாநில நிர்வாகம் அனைத்து மண்டல முதன்மை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் இது விற்பனைக்கான ஊக்கத்தொகை அல்ல. நாங்கள் பணியில் சேரும்போது செலுத்திய டெபாசிட் தொகைக்கான வட்டி மட்டுமே’ என்றனர்.

Tags : All District Managers ,
× RELATED குலுக்கல் முறையில் அலுவலர்கள்...