×

பேரூராட்சி அதிகாரிகள் அதிரடி மளிகை கடைகளில் 2.9 டன் பிளாஸ்டிக் பை பறிமுதல்

சேந்தமங்கலம்,  ஜன.9: சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு  நடத்திய அதிகாரிகள், பயன்பாட்டுக்கு வைத்திருந்த 2.9 டன் பிளாஸ்டிக் பைகளை  பறிமுதல் செய்தனர். கடைகளின் உரிமையாளருக்கு ₹3,500 அபராதம் வசூலித்தனர். சேந்தமங்கலம் பேரூராட்சியில் 18  வார்டுகள் உள்ளது. சமீப காலமாக இங்குள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் பயன்படுத்தி வருவதாக பேரூராட்சி  நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் காலசாமி  தலைமையில் துப்புரவு ஆய்வாளர் பாலு, இளநிலை உதவியாளர் தேவராஜன் மற்றும்  பணியாளர்கள் கொண்ட  இரண்டு குழுக்களை அமைத்து மெயின் ரோடு, மேற்கு கடை  வீதி, காந்திபுரம், வளையக்கார தெரு, ராசிபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட  பகுதிகளில் உள்ள மளிகை கடை, ஓட்டல், வணிக வளாகங்கள், பேக்கரி உள்ளிட்ட  கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசால்  தடைசெய்யப்பட்ட 2900 கிலோ பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டு  இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த  அதிகாரிகள், கடைகளின் உரிமையாளுக்கு ₹3,500 அபராதம் வசூலித்தனர். தொடர்ந்து  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன் படுத்தினால், அதிகளவில் அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.

Tags : grocery stores ,
× RELATED குட்கா விற்பனை செய்த 3 மளிகை கடைகளுக்கு சீல்