×

சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

சேந்தமங்கலம், ஜன.9: சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேந்தமங்கல் ஒன்றியத்திற்குட்பட்ட குப்பநாயக்கனூர் ஊராட்சி, நாமக்கல் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சாலையோரம் புளியன், புங்கை உள்ளிட்ட மரங்கள் உள்ளன. பல் நுண்ணுயிரி பெருக்க மரங்களாக அவை இருப்பதால் மனிதருக்கு மட்டுமின்றி உயிரினங்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில், குப்பநாயக்கனூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் உள்ள பெரிய புங்கன் மரத்தின் கிளைகளை மர்ம நபர்கள் வெட்டி அகற்றியுள்ளனர். அருகிலேயே மின் கம்பிக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டுமாறு பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளாத நிலையில், யாருக்கும் தொந்தரவு இல்லாத சாலையோர மரங்களின் கிளைகளை வெட்டியுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலையோர மரங்களின் கிளைகளை நாங்கள் வெட்டவில்லை. அதனை வெட்டியது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர். அனுமதியின்றி மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Senthamangalam ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை