×

தாளவாடி ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., அ.ம.மு.க. இடையே கடும் போட்டி

சத்தியமங்கலம், ஜன.9: தாளவாடி ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., அ.ம.மு.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் 2 இடங்களில் தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம். ஆகியவை தலா ஒரு இடமும் என மொத்தம் தி.மு.க. கூட்டணி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட அ.ம.மு.க. 3 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும் சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.இதனால், யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடைேய, ஊராட்சி தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 4வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் முஜிபுல்லா அ.ம.மு.க. கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும், 2 கவுன்சிலர்களை இழுத்தால் ஊராட்சி தலைவர் பதவியை பிடித்துவிடலாம் என அ.ம.மு.க. ஒருபுறம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கிடையே, 8வது வார்டில் போட்டியிட்ட ரத்தினம்மா தாளவாடி காங்கிரஸ் பிரமுகரான காளநாயக்கரின் மனைவி என்பதால் காளநாயக்கர் தி.மு.க.வினரின் ஆதரவோடு தலைவர் பதவியை பிடிக்கலாம் என திட்டமிட்டுள்ளார். தற்போதைய சூழலில் சுயேட்சை வேட்பாளர் முஜிபுல்லாவிற்கும், 5வது வார்டில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க. கவுன்சிலர் லோகேஸ்வரி ஆகியோரையும் குறிவைத்து இருதரப்பினரும் காய்களை நகர்த்தி வருகின்றனர். இதில், தலைவர் பதவியை யார் கைப்பற்றுகின்றனர் என்பது 11ம் தேதி நடைபெறும் மறைமுக தேர்தலில் தெரிந்துவிடும்.

Tags : DMK ,AIADMK ,Panchayat ,Dalawadi ,competition ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...