×

கலெக்டர் அறிவிப்பு குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் கேண்டீன், லிப்ட் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்

குளித்தலை, ஜன. 9: குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் கேண்டீன், லிப்ட் வசதி செய்துழ தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நீதிபதி தெரிவித்தார். கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆய்வு பணிக்கு வந்த மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் ஆய்வு பணியை முடித்துக்கொண்டு நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தற்போது பயன்படாத நிலையில் உள்ள முன்னாள் சார்பு நீதிமன்ற கட்டிடமாக இருந்த கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு குளித்தலை வக்கீல் சங்கம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு குளித்தலை வக்கீல் சங்க தலைவர் சாகுல் அமீது தலைமை வகித்தார் குளித்தலை சார்பு நீதிபதி தர் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ் குற்றவியல் நீதித்துறை நடுவர் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்துகொண்ட மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் பேசுகையில், கிராம பகுதியில் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் பொழுது முதலில் நிற்பவர்கள் வக்கீல்கள் தான் வக்கீல் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் கேண்டீன் அமைத்து தரவேண்டும். அதேபோல் நீதிமன்ற வளாகத்திலிருந்து முதல் மற்றும் இரண்டாம் தளத்திற்கு மூத்த வழக்கறிஞர்கள் பொதுமக்கள் வழக்கு சம்பந்தமாக செல்லும்பொழுது சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். அதனால் லிப்ட் வசதி வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

கோரிக்கையின்படி விரைவில் குளித்தலை நீதிமன்றத்தில் கேண்டீன் வசதி, லிப்ட் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் குளித்தலை நீதிமன்றம் பாரம்பரியமிக்க நீதிமன்றமாக இருப்பதால் நீதிபதிகளுக்கு வக்கீல்கள்உறுதுணையாக செயல்பட்டதால் தான் குளித்தலை நீதிமன்றம் சுமூகமாக செல்கிறது. மேலும் மக்கள் நீதிமன்றத்தில் வைக்கப்படும் அனைத்து நிலையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மூத்த வக்கீல்கள் பாலன் சுந்தரமூர்த்தி ராஜு அரசு வக்கீல்கள் மனோகரன் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வக்கீல் சங்க செயலாளர் நாகராஜன் வரவேற்றார். முடிவில் துணைத்தலைவர் மருதமுத்து நன்றி கூறினார்.

Tags : Collector ,lift facility ,
× RELATED ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில்...