×

புதுபெருங்களத்தூர் அருகே ஆலப்பாக்கம், எஸ்எஸ்எம் நகரில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்

காஞ்சிபுரம், ஜன.9: புதுபெருங்களத்தூர் அருகே ஆலப்பாக்கம், எஸ்எஸ்எம் நகரில் குளம்போல் தேங்கிய மழைநீரால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புறவழிச்சாலை பணிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். செங்கல்பட்டு மாவடட்ம் புது பெருங்களத்தூர் அருகே  ஆலப்பாக்கம் பகுதியில், எஸ்எஸ்எம் நகர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 1800க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த  2018ம் ஆண்டு முதல் மக்கள் அரசின் வளர்ச்சி திட்டங்களான பீர்க்கங்காரணை  ஏரி சீரமைப்பு, பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலம் மற்றும் கிழக்கு தாம்பரம் வேளச்சேரி 150 அடி புறவழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளால், மேற்கண்ட குடியிருப்பை சேர்ந்த மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளதாக புகார் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் கலைஅமுதன், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது.

பெருங்களத்தூர், ஆலப்பாக்கம் எஸ்எஸ்எம் நகரின் குறுக்கே 150அடி புறவழிச்சாலை பணிகள் நடக்கின்றன. இந்த சாலை பணியால் மழைக் காலங்களில் நகர் பகுதியில் மழை நீர் புகுந்து வெள்ளக்காடாக மாறுகிறது.  எஸ்எஸ்எம் நகரின் அருகில் உள்ள விளை நிலங்களில் இருந்தும், விமானப்படை பாதுகாப்பு மைதானத்தில் இருந்தும் வெளியேறும் மழை நீர், புறவழிச்சாலை பணிகளால் தடைபட்டு, வெளியே செல்ல வழியில்லாமல் நகரிலேயே தேங்கி நிற்கிறது. மேலும் புத்தூர் முதல் மப்பேடு வரை செல்லும் வழிகளில் முறையான மழை நீர் வடிகால்வாய் இல்லை. ஏற்கனவே இருக்கும் நீர் வழி பாதைகளும் சாலைப்பணிகளால் அடைக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரால் புத்தூர், மப்பேடு சாலை முழுவதும் சேதம்டைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது.

இதே பகுதில் அமைந்துள்ள ஜிகேஎம் கல்லூரி மற்றும் பள்ளி, மதி சுந்தரவல்லி மற்றும் ஆல்வின் பள்ளி மாணவர்களும் தற்போது நடந்து வரும் 150 அடி புறநகர் சாலை பணிகளால் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
எனவே, 150 அடி புறநகர் சாலை பணிகளால் பாதிக்கப்பட்ட மழைநீர் வடிகால் பாதையை, அடுத்த மழை, வெள்ள சேதம் வருவதற்குள் உடனே சரி செய்து தர வேண்டும்.  மழைநீர் சென்று சேருவதற்கு ஏரி, குளங்களை தூர் வாரி சீரமைக்கத வேண்டும். எஸ்எஸ்எம் நகரின் காந்தி சாலையும் , 150 அடி புறவழிச்சாலையும் சந்திக்கும் இடத்தில் பொது மக்களின் போக்குவரத்துக்கு பயன் தரும் வகையில் ஒரு பாலம் அமைக்கர வேண்டும். புத்தூர் மப்பேடு சாலையை சீரமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : SSM ,Puduperngalathur ,
× RELATED பட்டுக்கோட்டை எஸ்.எஸ்.எம் ஜூவல்லரியில் அட்சய திருதியை கொண்டாட்டம்