×

மீஞ்சூர் அருகே பரபரப்பு தேர்தல் முன்விரோதத்தில் 3 பேருக்கு அடி, உதை

பொன்னேரி, ஜன. 9: மீஞ்சூர் காவல்நிலை எல்லைக்கு உட்பட்ட சிமாபுரம் ஊராட்சியில் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நர்மதா யோகேஷ்குமார், நிர்மலா சுப்பிரமணி, மல்லிகா கோவிந்தராஜ் ஆகிய 3 பெண்கள் போட்டியிட்டனர். கடந்த 3ம் தேதி வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவில் நர்மதா யோகேஷ்கு மார் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு பெற்றார். மற்ற 2 பெண்களும் தோல்வியடைந்தனர். இதில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜின் மனைவி தோல்வியடைந்ததால், மற்ற இருதரப்பினரிடையே கோஷ்டி மோதல், முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் யோகேஷ்குமாரின் தரப்பை சேர்ந்த ஹரிநாத், பூபாலன், சுப்பிரமணி ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கோவிந்தராஜ் கோஷ்டியை சேர்ந்த செந்தில்முருகன், அருள்முருகன், ராஜேந்திரன் ஆகியோர், அங்கு டீ குடித்து கொண்டிருந்தவர்களிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர் யோகேஷ்குமார் தரப்பை சேர்ந்த 3 பேரையும் இக்கும்பல் உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து உதைத்துவிட்டு தப்பி சென்றது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உருட்டுக்கட்டை தாக்குதலில் ஈடுபட்ட அருள்முருகன், செந்தில்முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான ராஜேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : election protests ,Minjur ,
× RELATED மீஞ்சூர் அருகே மாரி என்பவரை மிரட்டி...