×

வேளாண் அதிகாரி ஆலோசனை முத்துப்பேட்டையில் 15 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

முத்துப்பேட்டை, ஜன.8: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா நேற்று தேர்தல் நடந்தும் அலுவலரும் கலெக்டரின் நேர்முக உதவியாளருமான (சத்துணவு) அனபரசு தலைமையில் நடைப்பெற்றது. முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றியழகன் வரவேற்று பேசினார். மூத்த ஒன்றிய கவுன்சிலர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களான 1-வது வார்டு ராஜா(பாமக), 2-வது வார்டு கனியமுதா (அதிமுக), 3-வது வார்டு யசோதா (சுயே), 4-வது வார்டு சுமதி (இ.கம்யுனிஸ்ட்), 5-வது வார்டு தேவகி (திமுக), 6-வது வார்டு அனிதா(சுயே), 7-வது வார்டு ஜெயராமன்(அதிமுக), 8-வது வார்டு பழனிவேல்(திமுக), 9-வது வார்டு; ரோஜாபானு(சுயே), 10-வது வார்டு ராதா (சுயே), 11-வது வார்டு ராஜேஷ்(சுயே), 12-வது வார்டு கஸ்தூரி(அதிமுக), 13-வது வார்டு ஜாம்பை கல்யாணம்(திமுக), 14-வது வார்டு அன்பழகன் (பாஜக), 15-வது வார்டு பாக்கியம்(அதிமுக) ஆகிய 15ஒன்றிய கவுன்சிலர்களும் பதவி ஏற்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மேலாளர், ஒன்றிய நிர்வாக அலுவலர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர். இந்நிலையில் விரைவில் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடைபெற இருப்பதால் கவுன்சிலர்கள் கடத்தல் சம்பவங்கள் பல்வேறு பகுதியில் நடந்து வருவதால் பதவியேற்பு விழாவிற்கு வெற்றி பெற்றவர்களை தவிர யாரையும் போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் சுமார் 500மீட்டர் தூரத்திற்கு சாலை இரண்டு வழியிலும் போலீசார் பேரிக்காடு அமைத்து மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு யாரையும் விடாமல் தடுத்து வெற்றி பெற்றவர்கள் அலுவலக ஊழியர்களை பல சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். வெற்றி பெற்றவர்களின் ஆதரவாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்புடன் காணப்பட்டது.

Tags : Councilors ,Union ,
× RELATED அதிகரித்து வரும் வெப்பநிலை தீ தடுப்பு,...