×

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர்கள் பதவியேற்பால் கிராமங்கள் விழாக்கோலம்

வேதாரண்யம், ஜன.8: வேதாரண்யம் தாலுகாவில் 36 ஊராட்சிகளிலும் ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்கும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆதனூரில் சந்திரா,அம்மாபேட்டையில் வனிதா,ஆயக்காரன்புலம்-1ல் நெல்சன்யாசர்பிரபு, ஆயக்காரன்புலம்-2ல் ராமையன், ஆயக்காரன்புலம்-3ல் பானுமதி, ஆயக்காரன்புலம்-4ல் தமிழரசி, செட்டிபுலத்தில் கலா, கடினல்வயலில் வைத்திலிங்கம், கரியாப்பட்டினத்தில் ரவிச்சந்திரன், கருப்பம்புலம் சுப்புராமன், கத்திரிப்புலம் அபிமன்னன், கோடியக்கரை சுப்பிரமணியன், கோடியக்காடு தமிழ்மணி, குரவப்புலம் சரவணன், மருதூர் வடக்குசங்கீதா, மருதூர் தெற்குபழனிச்சாமி, மூலக்கரை செந்தில்குமார், நாகக்குடையான் ராஜேந்திரன், நெய்விளக்குகவிதா, பஞ்சநதிக்குளம் கிழக்கு வீரதங்கம், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்திசத்யகலா, பஞ்சநதிக்குளம் மேற்கு மணிமேகலை, பன்னாள் சாந்தி, பெரியகுத்தகை ஜெயகாந்தி, பிராந்தியங்கரை ராஜலெட்சுமி, புஷ்பவனம் நாடிமுத்து. செண்பகராயநல்லூர் கல்யாணி, செம்போடை மதியழகன், தகட்டூர் ரேவதி, தாணிக்கோட்டகம் முருகானந்தம், தென்னடார் தேவி, தேத்தாகுடிவடக்கு விஜயா, தேத்தாகுடிதெற்கு வனஜா, வடமழை-மணக்காடுசரவணன், வாய்மேடுமலர், வண்டுவாஞ்சேரி தமிழ்செல்வி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழாவிற்கு பல ஊராட்சி மன்ற கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு வௌ்ளையடித்து வாழைமரம், தோரணங்கள் கட்டி மேளதாளங்கள் முழங்க வெடி முழக்கத்துடன் பதவி யேற்றனர். பல இடங்களில் ஆயிரக்கணக்கான வெடிகளும், பிரியாணி அறுசுவை உணவு பதவியேற்கும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.33 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று பதவி யேற்றுக்கொண்ட சுப்புராமன் எளிமையான முறையில் பதவியேற்றுக் கொண்டார். வேதாரண்யம் ஒன்றியம் கத்தரிப்புலத்தில் பதவியேற்பு விழாவிற்கு முன்பாக கணபதி ஹோமம் நடத்தி பிறகு ஊராட்சி மன்ற தலைவராக அபிமன்னன் பதவி யேற்றுக்கொண்டார். 36 ஊராட்சிகளிலும் ஒரே நேரத்தில் பதவியேற்றதால் கிராமங்கள் விழாக்கோலமாக களை கட்டியது. மேலும் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலராக கமலா, நடராஜன், ராஜசேகர், நளினி, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற வைத்தியநாதன், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவழகன் உள்ளிட்ட 25 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.இதேபோல் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் 11 ஒன்றிய கவுன்சிலர்களும் பதவியேற்று கொண்டனர். மேலும் தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சி மன்ற தலைவர்களும், அந்தந்த ஊராட்சி மன்றத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.

Tags : Village Ceremony ,Vedaranyam Panchayat Union ,
× RELATED வேதாரண்யம் பகுதியில் குடியரசு தினம் கொண்டாட்டம்