×

அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பு 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் பதிவு செய்ய 13ம் தேதி கடைசி

கோவை, ஜன.8:அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்ய தவறிய 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் வரும் 13ம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: நடப்பாண்டு மார்ச் மாதம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் நேரடி தனித்தேர்வர்களுள், தேர்வுகள் இயக்கத்தால் அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தவறிய தனிதேர்வர்கள் வரும் 13ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம். மாவட்ட கல்வி அலுவலகங்களில் ரூ.125ஐ பதிவு கட்டணமாக செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து மாவட்ட கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்கு சென்று அறிவியல் பாட செய்முறை வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

அறிவியல் பாட செய்முறை வகுப்பிற்கு பதிவு செய்தவுடன், மாவட்ட கல்வி அலுவலரால் வழங்கப்படும் விண்ணப்ப அத்தாட்சி சீட்டை பெற்று அவரவர் கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு தேர்வு மையத்தில் சமர்ப்பித்து மார்ச் பொதுத்தேர்வுக்கு 13ம் தேதி வரை அறிவியல் பாட கருத்தியல் உட்பட விண்ணப்பிக்க தகுதியான பாடங்களுக்கு (அனைத்து மற்றும் தவறிய) சேவை மையத்தின் மூலம் தனியாக ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயின்று  தேர்ச்சி மற்றும் இடையில் நின்ற மாணக்கர்கள் தேர்வுத்துறையால் நடத்தப்படும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி  தேர்ச்சி பெற்றவர்களும், முதல்முறையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் நேரடி தனித்தேர்வர்கள் புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் செய்முறை, கருத்தியல் தேர்வு எழுதவேண்டும். அதேபோல  கடந்த ஆண்டு தேர்வெழுதி அறிவியல் கருத்தியலில் தேர்ச்சி பெற்று செய்முறை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் செய்முறை தேர்வு மட்டும் எழுதினால் போதுமானது. 2012ம் ஆண்டிற்கு முன் அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் (2019) அறிவியல் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை தேர்வு எழுதவேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 13ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

Tags :
× RELATED தனியாக பயணம் செய்கின்ற பெண்களின்...