×

சாத்தூரில் சமூகவிரோதிகளின் புகலிடமான ஆங்கிலேயர் காலத்து பாலம் இரவு நேரங்களில் மது அருந்தி அட்டகாசம்

சாத்தூர், ஜன. 8: சாத்தூரில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் சமூகவிரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. இதை கட்டுப்படுத்தி பொதுமக்களின் நடைபாதையாக பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வைப்பாற்றை கடப்பதற்காக கடந்த 1863ல் ஆங்கிலேயர் ஆட்சியில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக பதநீர், கடுக்காய், சாதிக்காய், கருப்பட்டி பாகு, சுண்ணாம்பை ஆகியவற்றை கலந்து பலமாக கட்டினர். 1867ல் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 840 அடி நீளமும் 14 அடி அகலமும் உள்ள இந்த பாலம் வழியாக ஆங்கிலேயர்களின் குதிரை பூட்டபட்ட ஜட்கா வண்டிகள் மட்டும் சென்று வந்தன. சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த பாலம் வழியாக கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் சென்று வந்தன. குதிரை வண்டிகள் மட்டுமே சென்று வந்த 14 அடி அகல பாலத்தில் எதிரெதிரே வாகனங்கள் வரும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 156 ஆண்டுகளை கடந்தாலும் பாலம் கம்பீரமாகவும் உறுதியாகவும் இருப்பதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : English Bridge Bridge ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு