×

தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் அண்ணன் மறைவு: மு.க.ஸ்டாலின், உதயநிதி நேரில் அஞ்சலி

ஆவடி, ஜன. 8: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் அண்ணன் சா.மு.இக்பால் (68) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை காலமானார். அவரது உடல் ஆவடி, காமராஜர் நகர், புத்தர் தெருவிலுள்ள இல்லத்தில் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கழக இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் வந்து, அஞ்சலி செலுத்தினர். மேலும் கழக பொருளாளர் துரைமுருகன், கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி, ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.ஆர்.ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஏ.பி.நந்தகுமார், எஸ்.சுதர்சனம், சி.வி.எம்.பி.எழிலரசன் முன்னாள் மாவட்ட செயலாளர்  இ.ஏ.பி.சிவாஜி,  தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா, மாவட்ட நிர்வாகிகள் திராவிட பக்தன் நடுகுத்தகை ஜெ. ரமேஷ், ஆர்.டி.இ.ஆதிசேஷன், பூவை.ஜெரால்டு, மா.ராஜி, சிவசங்கரி, ஜெய்.மதன், திருமலை, ஒன்றிய செயலாளர்கள் துரைவீரமணி, பூவை.எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, எஸ்.மகாலிங்கம், ஆர்.ஜெயசீலன், மீ.வே.கருணாகரன், புழல் ஜெகதீசன், கூளூர்  ராஜேந்திரன், கிறிஸ்டி, கே.அரிகிருஷ்ணன், மோ.ரமேஷ், புஜ்ஜி  ராமகிருஷ்ணன், நகர செயலாளர்கள் ஆவடி ஜி.ராஜேந்திரன், பூவை.ரவிக்குமார், என்.இ.கே.மூர்த்தி, சி.சு.ரவிச்சந்திரன், தி.வே.முனுசாமி, தி.வை.ரவி, செங்குன்றம் ராஜேந்திரன், இளைஞரணி நிர்வாகிகள் பிரபுகஜேந்திரன், நாராயணபிரசாத், பா.நரேஷ்குமார், எம்.கே.ரமேஷ், மோதிலால், அணிகளின் அமைப்பாளர்கள் சிட்டிபாபு, டி.கே.பாபு, ஆர்.ராஜா, சரஸ்வதி சந்திரசேகர், நாகூர்கனி, வக்கீல் புரட்சிதாசன், டாக்டர் குமரன், திருமால், ஆவடி மாநகர நிர்வாகிகள் ருக்கு, பேபி சேகர், நளினிகோபி, சண்.பிரகாஷ், கலை.சேகர், கு.சேகர், பொன்.விஜயன், பாதாகை சிங்காரம் மற்றும்  பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தொழிலதிபர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Tags : district ,Nasser ,brother ,DMK ,MK Stalin ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...