×

சீர்காழி ஒன்றியத்தில் பதவியேற்ற 21 கவுன்சிலர்களும் புதுமுகம்

சீர்காழி, ஜன.7:சீர்காழி ஒன்றியத்தில் பதவி ஏற்றுக்கொண்ட 21 கவுன்சிலர்களும் புதுமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 9 பேர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 7 பேர், சுயேட்சையாக வெற்றிபெற்ற 5 பேர் என மொத்தம் 21 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், ரவிச்சந்திரன், மேலாளர் கலியராஜ் முன்னிலையில் ராதாநல்லூர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற மூத்த ஒன்றிய கவுன்சிலர் அறிவழகன், புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்றுக்கொண்ட அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : councilors ,Sirkazhi Union ,
× RELATED நகர்மன்ற கூட்டம் தொடர்பாக ஆலோசனை