×

நகர்மன்ற கூட்டம் தொடர்பாக ஆலோசனை

தேனி, மார்ச் 8: தேனி நகர்மன்றத்தில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் ஒரு உறுப்பினர் இயற்கை மரணம் அடைந்ததை அடுத்து தற்போது 32 கவுன்சிலர்கள் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நகராட்சி மூலம் விடப்பட உள்ள டென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து தீர்மானங்கள் கூட்டத்தில் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நகர்மன்ற கூட்டத்தின் போது ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்த நகர் மன்றம் முடிவு செய்தது.அதன்படி தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமை வகித்தார்.

நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, நகர் மன்ற துணைத் தலைவர் வக்கீல் செல்வம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் நகராட்சி கவுன்சிலருமான நாராயண பாண்டியன், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக கட்சிகளை சேர்ந்த பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

The post நகர்மன்ற கூட்டம் தொடர்பாக ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Council ,Theni ,Theni Municipal Council ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு