×

எடப்பள்ளி ஊராட்சி துணைதலைவர் பதவிக்கு நடக்கிறது குதிரை பேரம்

குன்னூர், ஜன.7:எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட தலைவர் போட்டியில், அதிமுகவை சேர்ந்த முருகன் வெற்றி பெற்றார். வார்டு உறுப்பினர்கள் போட்டியில்,  வார்டு 1- ராதா, 2- ஷர்மிளா, 3-கோபால் ராஜ், 4- பரத், 6- சரண்யா, 7- பார்வதி,  8- மகேஸ்வரி, 9-சுசீலா வெற்றியடைந்துள்ளனர். தற்போது ஊராட்சி துணைதலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. திமுக மற்றும் அதிமுக சம நிலையில் உள்ளது. கடந்த முறையே துணை தலைவராக இருந்தவர்  தற்போது துணை தலைவர் பதவிக்கு பல லட்சம் ரூபாய் செலவழித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் வருகின்ற 11ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், உறுப்பினர்களுக்கு அதிமுகவினர் பல லட்சங்கள் வழங்கி குதிரை பேரம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Tags : Edappally Panchayat ,Vice President ,
× RELATED கே.எம்.சி.எச். மருத்துவமனையில்...