×

நெல் தரிசு பயறுவகை பயிர்களில் உயர்விளைச்சல் சாகுபடி தொழில்நுட்பங்கள்

நெல் தரிசு பயறுவகை பயிர்களில் உயர்விளைச்சல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் பேராசிரியர்கள் வழிகாட்டியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ராஜா ரமேஷ், ராமசுப்பிரமணியன் ஆகியோர் கூறுகையில், பயறு வகைப் பயிர்களானது மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கும், அறிவாற்றலுக்கும் அத்தியாவசிய தேவையான புரதச் சத்தை தன்னகத்தே கொண்டுள்ளன. தானியப்பயிர்களைக் காட்டிலும் பயறு வகைப்பயிர்களில் புரதச்சத்தானது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. எனவே பயறு வகைப் பயிர்களானது ஏழைகளின் மாமிசம் என்றழைக்கப்படுகிறது. 100 கிராம் உளுந்து மற்றும் பச்சைப் பயரில் புரதச்சத்து 24 முதல்; 25 சதம், மாவுச்சத்து 62 முதல் 64 சதம், நார்ச்சத்து 16 சதம் உள்ளது. 345 கிலோ கலோரி கிடைக்கும். மேலும் வைட்டமின்கள் தயமின், ரிபோ ப்ளேவின், நயாசின் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் எனவே பயறு வகைப் பயிர்களானது கால்நடைத் தீவனமாகவும், பசுந்தாள் உரமாகவும், மண் அரிமானத்தைத் தடுக்கும் போர்வையாகவும் திகழ்கின்றன.

உலக சுகாதார அமைப்பானது ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு 80 கிராம் புரதச்சத்து தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் 40 கிராமுக்கும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் 2017-18ஆம் ஆண்டு புள்ளி விபரப்படி 29 மில்லியன் எக்டர் சாகுபடி செய்யப்பட்டு 25.23 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 8.16 இலட்சம் எக்டரில் பயறு வகைப் பயறுகள் சாகுபடி செய்யப்பட்டு சுமார் 5.72 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் பயறுவகைத் தேவையானது 7 லட்சம் டன்களுக்கும் அதிகமாகும். காவிரி டெல்டா பாசனப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக் கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் 1.46 இலட்சம் எக்டர்களில் உளுந்து மற்றும் பச்சைப் பயறானது நெல்தரிசில் பயிரிடப்பட்டு 32 ஆயிரம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. பயறுவகைப் பயிர்களின் சராசரி உற்பத்தித்திறனானது இந்திய அளவில் ஒர் எக்டேருக்கு 835 கிலோ என்ற அளவில் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் உற்பத்தித் திறன் குறைவு. எனவே கீழ்கண்ட முறைகளை பின் பற்றினால் அதிக விளைச்சல் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும்.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை க்கு முன்பாக மெழுகு பத ஈரப்பதத் தில் பயறு வகை பயிர்களின் விதைகள் விதைக்கப்பட்டு சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு நெல் தரிசுப் பயிர்கள் அல்லது தொடர் பயிர்கள் என்று பெயர். நெல் தரிசில் வயலிலுள்ள ஈரப்பதம் மற்றும்ஊட்டச் சத்துக்களை பயன்படுத்தி சாகுபடி செய்யப் படுவதால் அதிக செலவின்றி விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ரகங்கள்: உளுந்து ரகங்கான ஏடிபி 3, ஏடிபி 5, ஏடிபி 6, டிஎம்வி 1 மற்றும் கோ 4, பச்சைப் பயறு இரகங்களான ஏடிபி 3, கேஎம் 2 ஆகியவற்றை சாகுபடி செய்யலாம். தரமான சான்று பெற்ற விதைகளை தேர்வு செய்து பயன்படுத்தவும். பட்டம்: தைப்பட்டம் மிகவும் ஏற்ற பருவமாகும். எனவே ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15க்குள் காலம் தாழ்த்தாமல் விதைக்க வேண்டும். ஏனெனில் அந்த சமயத்தில் வயலில் காணப்படும் ஈரப்பதம் மற்றும் பனி ஈரமும் பயிர்கள் வளர்வதற்கு உற்ற துணைபுரியும். விதையளவு: ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதை போதுமானதாகும். இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் இடங்களில் 12 கிலோ விதையளவை பயன்படுத்த வேண்டும். மேலும் சங்கிலி வடிவ இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யும் இடங்களில் பயிர்கள் நன்கு வளரும்.

விதை நேர்த்தி: ஆறிய அரிசி கஞ்சியில் ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 10 கிலோ விதையுடன் ஒரு பாக்கெட் ரைசோபியம் (200 கிராம்), ஒரு பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (200 கிராம்) ஆகிய உயிர் உரங்கள் மற்றும் 100 கிராம் சூடோமோனாஸ் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்பு அதனை 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்கள் விதைப்பு செய்ய வேண் டும். விதைப்பு: சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடையானது ஆட்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இடங்களில் அறுவடைக்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்பாகவும், இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் இடங்களில் 4 முதல் 6 நாட்களுக்கு முன்பாகவும் மெழுகுபத ஈரப்பதத்தில் விதைகள் விதைக்கப்பட வேண்டும். மெழுகுப்பதம் இல்லையெனில் நீhப்பாசனம் செய்து மெழுகுப் பதம் வந்த பின்பு விதைகளை தெளிக்க வேண்டும்.

பயிர்களின் எண்ணிக்கை ஒரு சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்குமாறு பார்த் துக் கொள்ள வேண்டும். விதைகள் முளைக்காத இடங்களில் முளை கண்ட விதைகளை மீண்டும் தெளித்து சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
களைக் கட்டுப்பாடு: விதைத்த 20ம் நாள் ஒரு ஏக்கருக்கு 400 மிலி குயிலா பாப் ஈதைல் களைக்கொல்லி மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்த தெளித்து புல் வகை களைகள், நெல் மறுதாம்பு பயிர் மற்றும் நெல் அறு வடையின் போது விழுந்து முளைக்கும் நெல் நாற்றுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். அகன்ற இலை களைகளைக் கட்டுப்படுத்த இமாசிதபயர் களைக்கொல்லி மருந்தினை ஒரு ஏக்கருக்கு 400 மி.லி என்ற அளவில் களை கள் 4 இலைப் பருவத்தில் இருக்கும்பொது வயலில் போதுமான ஈரம் வைத்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப் படுத்தலாம்.

Tags :
× RELATED சனிதோறும் புதுக்கோட்டை வடக்கு...