×

தேவர்குளத்தில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

நெல்லை, ஜன. 3: தேவர்குளத்தில் தொழிலாளியை மண் வெட்டியால் தாக்கிய சகோதரர்கள் .உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறை சேர்ந்தவர் மாடசாமி (55). கூலி தொழிலாளி. இவரது மூத்த சகோதரி லட்சுமி தேவர்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு கடந்த 30ம் தேதி மாடசாமி சென்றார். அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த அருணாசலவடிவு (55) மாடசாமியை பார்த்து அடிக்கடி துப்பியதாக கூறப்படுகிறது.  இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அருணாசலவடிவின் இரு மகன்களான சாலமன் (36), இம்மானுவேல் (34) ஆகியோர் ம்ண்வெட்டியால் மாடசாமியை சரமாரியாக தாக்கினர்.  இதில் படுகாயமடைந்த மாடசாமி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய தேவர்குளம் போலீசார், சாலமன், இம்மானுவேல், இவர்களின் தந்தை ஆவுடையப்பன், தாய் அருணாசலவடிவு ஆகிய 4 பேர் மீது வழக்–்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED துணை சுகாதார நிலைய காலியிடங்களை...