×

திசையன்விளையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மொபட்

திசையன்விளை, ஜன. 3: திசையன்விளையில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தனது சொந்த செலவில் ரூ.2.25 லட்சம் மதிப்பில் 3 சக்கர மொபட்டை இன்பதுரை  எம்எல்ஏ வழங்கினார்.  அதிமுக அடிப்படை உறுப்பினர்களான  மாற்றுத்திறனாளிகள் சுந்தரகுமார், லிங்கம் ஆகியோருக்கு தனது சொந்த செலவில் ரூ.2.25 லட்சம் மதிப்பில் 3 சக்கர மொபட்டை  இன்பதுரை எம்எல்ஏ வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் அந்தோனி அமலராஜா,  அரசு வழக்கறிஞர் பழனிசங்கர், நகர செயலாளர் சுடலைமணி, நகர ஜெ. பேரவை செயலாளர்  ஜெயக்குமார், நவ்வலடி சரவணகுமார், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்  ஜெயபால், பால்ராஜ், கிருஷ்ணன், சேகர், பிரகாஷ், பாலன், ராமலிங்கம், சபரி,  நகர பொருளாளர் லிங்கதுரை, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார்,  பெரியசாமி, காங்கிரஸ் நகர முன்னாள் தலைவர் முத்து உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

Tags :
× RELATED கோவில்பட்டியில் பரபரப்பு மது குடிக்க பணம் கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்