×

திமுக மெஜாரிட்டி பெறுவதை தடுக்க சூழ்ச்சி? பாதாள சாக்கடை மூடி சரி செய்யாததால் வாகனஓட்டிகள் தடுமாற்றம்

கரூர்,ஜன.3: கரூர் லைட்ஹவுஸ்கார்னரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்துவிட்டது. மூடியை மாற்ற ஏற்பாடு செய்யவில்லை. பள்ளிகுழந்தைகள் சென்றுவரும் பகுதியாகவும், வாகனப்போக்குவரத்து மிகுந்தசாலையாகவும் இந்த சாலை உள்ளது. பாதாள சாக்கடை மூடி உடைந்து ஒருவாரத்திற்கு மேல் ஆகிறது. இன்னமும் அதனை மாற்றவில்லை. கட்டைகளையும் கற்களையும் வைத்து அடைத்துள்ளனர். இரவுநேரத்தில் இருசக்கரவாகனத்தில் வருவோர் தடுமாற்றம் அடைக்கின்றனர். பாதாள சாக்கடை மூடியை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Maneuver ,DMK ,
× RELATED பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பாஜ...