×

வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள்: மலிவான விலை; ஏழை மக்களுக்கு செளகரியமாக இருக்கும்…பிரதமர் மோடி பேச்சு.!!!

டெல்லி: குளோபல் ஹவுசிங் டெக்னாலஜி சேலஞ்ச்-இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், திரிபுரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் தலைநகரான சென்னை, லக்னோ, இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி,  அகர்தலா ஆகிய ஒவ்வொரு தலைநகரங்களிலும் 1,000 வீடுகட்ட பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த 6 நவீன சிறிய அதி விரைவு வீட்டு வசதி திட்டங்கள், நாட்டில் வீடுகள் கட்டுமான திட்டங்களுக்கு புதிய பாதையை வகுக்கும் என்றார். ஒரு காலத்தில், வீட்டு வசதி திட்டங்கள்,  மத்திய அரசுகளின் முன்னுரிமை திட்டங்களாக இல்லை. ஆனால், ஒட்டு மொத்த வளர்ச்சி ஏற்படாமல், மாற்றம் சாத்தியமில்லை என்பதை நாங்கள் அறிவோம். புதிய அணுகுமுறையை பின்பற்றி நாடு மாற்று பாதையில் முன்னேறுகிறது.இந்த உலகளாவிய கோவிட்-19 சவால், புதிய தொழில்நுட்பத்துடன் புதுமைகளை உருவாக்கி வாழ வாய்ப்பளித்துள்ளது. இன்று வெவ்வேறு பகுதிகளில் 6 நவீன சிறிய அதிவிரைவு வீட்டு வசதி திட்டங்களை நாம் தொடங்கியுள்ளோம். நவீன  தொழில்நுட்பம் மற்றும் புதுமை நடைமுறைகளால் இத்திட்டங்கள் நிறைவு பெறும். இந்த திட்டங்கள் நவீன தொழில்நுட்பத்துடனும், புதுமையான நடைமுறைகளுடனும் உருவாக்கப்படும். குறைந்த காலத்தில் விரைவாக கட்டப்படும் இந்த  வீடுகள், மலிவான விலையிலும், ஏழை மக்களுக்கு செளகரியமாகவும் இருக்கும். ராஞ்சியில், ஜெர்மனியின் முப்பரிமாண கட்டுமான முறையை நாம் பயன்படுத்துகிறோம். இந்த முறையில், ஒவ்வொரு அறையும் தனியாக கட்டப்பட்டு, பின்னர் மொத்த கட்டுமானமும் இணைப்பு வடிவங்கள் மூலம் ஒன்றாக இணைக்கப்படும். இந்த திட்டங்கள், நமது திட்ட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், கட்டிட கலை நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மையங்களாக திகழும். இந்த புதிய தொழில்நுட்பத்தை அவர்களால் இங்கு பரிசோதிக்க முடியும். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான வீடுகள் குறுகிய காலத்தில் கட்டப்பட்டன. இன்னும் பல வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்றார். …

The post வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள்: மலிவான விலை; ஏழை மக்களுக்கு செளகரியமாக இருக்கும்…பிரதமர் மோடி பேச்சு.!!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Tamil Nadu ,Uttar Pradesh ,Madhya Pradesh ,Gujarat ,Tripura ,Andhra Pradesh ,Global Housing Technology Challenge ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...