×

மாவட்டம் சிவகாசி ஒன்றியத்தில் திமுக முன்னிலை

சிவகாசி, ஜன. 3: சிவகாசி ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு கடந்த 27ல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், 54 பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 243 பேரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,163 பேரும், 31 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 188 பேரும், 3 மாவட்ட பஞ்சாயத்து பதவிகளுக்கு 23 பேரும் போட்டியிட்டனர். 326 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1 லட்சத்து 32 ஆயிரத்து 965 வாக்குகள் பதிவாயின. வாக்கு சதவீதம் 69.86. சிவகாசியில் எஸ்.எச்.என்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிக்கு பதிவான ஓட்டுகள், ஒன்றியக் கவுன்சிலருக்கு பதவிக்கு பதிவான ஓட்டுகள், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பதிவான ஓட்டுகள் தனித்தனியாக எண்ணப்பட்டன.  

கடும் சோதனைக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வேட்பாளர்கள், முகவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணும் பணிகளும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. இதனை முன்னிட்டு சிவகாசியில் சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி வரும் அனைத்து வாகனங்களும் பெரியகுளம் கண்மாய் வழியாக விளாம்பட்டி ரோட்டுக்கு வந்து அங்கிருந்து சிவகாசி நகருக்கு செல்லும் வழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி டிஎஸ்பி பிரபாகரன் தலைமையில் 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையத்தை தேர்தல் பார்வையாளர் சீனிவாசன் பார்வையிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது மையங்களில் அதிமுகவினர் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். தொடர்ந்து திமுகவிற்கு சாதகமாக இருந்ததால் திமுகவினர் குவிந்தனர். காலையில் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் மதியம் 11 மணிக்கு மேல் முதல்சுற்று நிலவரம் தெரிந்தது. 31 ஒன்றிய வார்டுகளில் நேற்று இரவு 8 மணி நேர நிலவரப்படி 13 வார்டுகளில் 9 வார்டில் திமுகவும், 3 வார்டில் அதிமுகவும், ஒரு வார்டில் அமமுகவும் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள்: 1வது வார்டில் திமுக வேட்பாளர்  உமாராணி 1,727 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் லேகப்பிரியா 998 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 2வது வர்ர்டில் திமுக வேட்பாளர் 1822 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக நாகஜோதி 1,698 வாக்குகள் மட்டும் பெற்றார். 3வது வார்டில் அதிமுக வேட்பாளர் மீனாட்சி சுந்தரி 1002 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2வது இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வீரசெல்வராஜ் 653 வாக்குகளும், திமுக வேட்பாளர் 631 வாக்குகளும் பெற்றனர். 4வது வார்டில் திமுக வேட்பாளர் மருதன் 2,306 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் முத்துஇருளான்டி 1,650 வாக்குகள் மட்டும் பெற்றார். 6வது வார்டில் திமுக வேட்பாளர் முத்துலட்சுமி 2291 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் 1729 வாக்குகள் மட்டும் பெற்று 2ம் இடத்தை பெற்றார்.

பஞ்சாயத்து தலைவர் வெற்றி நிலவரம்:  சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 பஞ்சாயத்து தலைவர் பதவிகள் உள்ளன.  இதில், 3 பஞ்சாயத்து தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 51 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் எரிச்சநத்தம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் முத்துப்பாண்டி, புதுக்கோட்டை-காளீஸ்வரி, செவலூர்-சித்ராதேவி, கொத்தனேரி-லட்சுமணப்பெருமாள், நடையனேரி-நாகஜோதி, கவுண்டன்பட்டி-வீரநாகம்மாள், வெள்ளூர்-ஈஸ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Tags : DMK ,district ,Sivakasi ,
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்