×

இன்று வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிறந்தநாள் திருவில்லி.யிலும் திமுக முன்னிலை

திருவில்லிபுத்தூர், ஜன. 3: திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்  கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 246 இடங்கள் உள்ளன. இதில் 47 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக 199 இடங்களுக்கு 671 பேர் போட்டியிட்டனர். 29 பஞ்சாயத்து தலைவர் பதவி இடங்கள் உள்ளன. இதில், விழுப்புரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் தமிழ்ச்செல்வன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாக்கியுள்ள 28 ஊராட்சி தலைவர் பதவிக்கு 139 பேர் போட்டியிட்டனர். ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளுக்கு இறுதி வேட்பாளர் பட்டியல்படி 112 பேர் போட்டியிட்டனர். 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 16 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திருவில்லிபுத்தூர் தியாகராஜர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 1,3,4,6 வார்டுகளை திமுகவும், 2,5 வார்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

Tags : Gopalakrishnan ,birthday ,
× RELATED 53வது பிறந்தநாள்: அஜித்துக்கு டுகாட்டி பைக் பரிசளித்த ஷாலினி