×

தஞ்சை பெரிய கோயிலுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் மணி

தஞ்சை, ஜன. 3: தஞ்சை பெரிய கோயிலுக்கு பக்தர் ஒருவர் வழங்கிய ரூ.2 லட்சம் மதிப்பிலான கோயில் மணி பொருத்தப்பட்டது.தஞ்சாவூர் பெரிய கோயிலில் மூலவர் பெருவுடையார் சன்னதிக்கு செல்லும் வாயில் முன்பாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக “கோயில் மணி” பொருத்தப்பட்டிருந்தது. இந்த மணி பழுதடைந்ததால் புதிய மணி பொருத்த திட்டமிடப்பட்டது.இதையடுத்து தஞ்சாவூரை சேர்ந்த பத்மநாபன் குடும்பத்தினர் புதிய கோயில் மணியை உபயமாக செய்து வழங்க முன்வந்தனர். இதையடுத்து புதிய கோயில் மணி தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே உள்ள நான்காம்கட்டளை என்ற கிராமத்தில் 362 கிலோ எடையில் மூன்றரை அடி உயரத்தில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் செம்பு, காரியம், வெண்கலம் கொண்டு வெண்கல கோயில் மணி வடிவமைக்கப்பட்டது. இந்த கோயில் மணி நேற்று பெரிய கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. கோயில் மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி அதை பழைய மணி உள்ள இடத்தின் அருகே புதிய மணியை பொருத்தப்பட்டது.

கொடிமரத்துக்கு பாலாலயம்: தஞ்சை பெரிய கோயிலில் மகாநந்திக்கு எதிரே 28 அடி உயரத்தில் கொடிமரம் 1814ம் ஆண்டு இரண்டாம் சரபோஜியால் அமைக்கப்பட்டது. அவை பழுதடைந்ததால் 2003ம் ஆண்டு புதிய கொடிமரமும், அதில் செப்புத்தகடு பொருத்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 5ம் தேதி பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடப்பதால் கொடிமரம் திருப்பணி செய்யப்படவுள்ளது. இதற்காக நேற்று கொடிமரம் பாலாலயம் நடந்தது.மருந்து சாத்துதல்: கோயிலில் உள்ள பெருவுடையார் மற்றும் 12 விநாயகர் சிலைகள், 8 முருகன் சிலைகள், 252 சிவலிங்க திருமேணிகள் உள்பட 338 சிலைகளுக்கு கடந்த மாதம் 9ம் தேதி மாகாப்பும், எண்ணெய்காப்பும் நடந்தது.இதையடுத்து அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நேற்று காலை துவங்கியது. இதில் அரக்கு பொடி, காவி பொடி, கருகுங்கிலியம், வெள்ளைமிளகு, வெண்ணெய் ஆகியவற்றை கொண்டு மருந்துகளை உரலில் உலக்கையால் இடித்து அதை மாவாக்கி சுவாமி சிலைகளின் அடி பீடத்தில் வைக்கப்பட்டது.நிகழ்ச்சிகளில் மாவட்ட நீதிபதி சிவஞானம், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், பெரிய கோயில் சதயவிழா குழு தலைவர் துரை.திருஞானம் பங்கேற்றனர்.

Tags : bell tower ,
× RELATED ஆக்கிரமிப்பு எதிரொலி மணிமுக்தாற்றின்...