×

ஆக்கிரமிப்பு எதிரொலி மணிமுக்தாற்றின் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்கும் அவலம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. விருத்தாசலத்தை சுற்றியுள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். கோயிலுக்கு பக்தர்கள் வரும் முன்பு அருகிலுள்ள மணிமுக்தாற்றில் நீராடிவிட்டு கோயிலை வழிபடுவது வழக்கம். மேலும் மாசி மக திருவிழா மற்றும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தல், இறந்தவர்களுக்கு கருமகாரியம் செய்வதற்கென கருமகாரிய கூடம் மணிமுக்தாற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இந்த கருமகாரியம் கூடத்தை பல ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமிப்பு செய்து பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

 இதனால் கருமகாரியம் மற்றும் திதி கொடுக்கும் நிகழ்ச்சியை மணிமுக்தாற்றில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் உள்ளது. இதனால் தற்போது தர்ப்பணம் மற்றும் கருமகாரியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முடியாமல் பொதுமக்கள் மணிமுக்தாற்றின் கரையோரம் உள்ள படிக்கட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

நேற்று அமாவாசை என்பதால் அங்குள்ள படித்துறைகளில் மேல் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர். இதுபோன்று மணிமுக்தாற்றில் தண்ணீர் வரும் போதெல்லாம் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அங்கு அமைந்துள்ள கருமகாரியம் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : aggressor ,stairwell ,bell tower , Aggression, bell-ringing, stairwell, prostitution, officers
× RELATED படிக்கட்டில் தொங்கியவாறு விபரீத...