×

ஆலத்தூர் ஒன்றிய வாக்குச்சாவடிகளில் ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

பாடாலூர், டிச. 31: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பின் 303 பதவிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பின் 359 பதவிகளில் 2 ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 56 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 303 பதவிகளுக்கு 859 பேர் போட்டியிடுகின்றனர். இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதற்காக ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பகுதிகளில் 174 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் 1,200க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர். ஆலத்தூர் ஒன்றிய பகுதியில் 89,406 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

இதில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 9 பேரும், 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 62 பேரும், 37 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 130 பேரும், 246 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 658 பேரும் என 303 பதவிகளுக்கு 859 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆலத்தூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஒரு சில கிராமங்களில் ஏற்பட்ட சிறு சிறு சலசலப்பு தவிர அனைத்து பகுதிகளிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

Tags : Alathur Union ,
× RELATED ஆலத்தூர் ஒன்றிய குழு கூட்டம்