×

முதல் கட்ட தேர்தலில் ரத்தான பெருமத்தூர்குடிகாடு ஊராட்சி 8வது வார்டுக்கு மறுதேர்தல் 60.28% வாக்குப்பதிவு

பெரம்பலூர்,டிச.31:பெரம்பலூர் அருகே முதல்கட்டத் தேர்தலில் ரத்துசெய்யப் பட்ட பெருமத்தூர் குடிகாடு ஊராட்சியின் 8வார்டுக்கு நடத்தப்பட்ட மறுதேர்தலில் 60.28சதவீத வாக்குப்பதிவானது. பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் பெரம்பலூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 470 பதவிகளுக்கு 27ம்தேதி நடத்தப்பட்டது. இதில் வேப்பூர் ஒன்றியம், பெருமத்தூர் குடிக்காடு ஊராட்சியில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 8வதுவார்டுக்கு குமாரி என்பவர் சாவி சின்னத்திலும், வைகையம்மாள் என்பவர் சீப்பு சின்னத்திலும், மாரியாயி (52) என்பவர் கட்டில் சின்னத்திலும் போட்டியிட மனுதாக்கல் செய்து இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். அதில் பெருமத்தூர் குடிக்காடு ஊராட்சியின் 8வது வார்டுக்கு போட்டியிட்ட மாரியாயி என்பவரது கட்டில் சின்னம் மட்டும் வாக்குச் சீட்டில் இடம்பெறவில்லை. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வேட்பாளர் மாரியாயி கொடுத்தப் புகாரின் பேரில், அந்த வார்டுக்கு மட்டும் தேர்தல் 11மணிக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது. பிறகு தமிழ்நாடு மாநிலத்தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2ம்கட்டத் தேர்தல் நடத்தப்பட்ட நேற்று (30ம்தேதி) மறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டது.

இந்த 8வது வார்டில் 303 ஆண் வாக்காளர்கள், 324 பெண் வாக்காளர்கள் என மொத்தமுள்ள 627 வாக்கா ளர்களில் 155ஆண் வாக்காளர்கள், 223 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 378 பேர் வாக்களித்திருந்தனர். வாக்கு சதவீதம் 60.28 ஆகும். ஆண்களைவிட பெண்கள் அதிகம்... 2ம் கட்ட வாக்குப்பதிவில் ஆண்வாக்காளர்களை விட 12,560 பேர் கூடுதலாக வாக் களித்துள்ளனர். இதில் மொத்தமுள்ள திருநங்கைகள் 11பேரில் ஒருவர் மட்டுமே வாக்களித்துள் ளார்.

Tags : Re-election ,phase ,8th Ward ,Ratan Perumurukkudikudi Panchayat ,
× RELATED சீனாவிற்கு அடுத்த...