×

ஏழு ஒன்றியங்களில் ஆயிரத்து 850 பதவிகளுக்கு தேர்தல் நிறைவு பெற்றது

சிவகங்கை, டிச.31: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஏழு ஒன்றியங்களில் உள்ள ஆயிரத்து 850 பதவிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.சிவகங்கை மாவட்டம் முழுவதும் 12 ஒன்றியங்களில் சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள 904 வாக்குச்சாவடிகளில் கடந்த டிச.27ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தது. நேற்று தேவகோட்டை, சாக்கோட்டை, கண்ணங்குடி, சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்புத்தூர், கல்லல் ஆகிய ஏழு ஒன்றியங்களுக்கு இரண்டாம்கட்ட தேர்தல் நடந்தது. எட்டு மாவட்ட ஊராட்சி வார்டுகள், தேவகோட்டை ஒன்றியத்தில் 149 வாக்குச்சாவடிகளில் 42 ஊராட்சி தலைவர்கள், 285 ஊராட்சி வார்டுகள், 14 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், கல்லல் ஒன்றியத்தில் 165 வாக்குச்சாவடிகளில், 44 ஊராட்சி தலைவர்கள், 309 ஊராட்சி வார்டுகள், 15 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், கண்ணங்குடி ஒன்றியத்தில் 64 வாக்குச்சாவடிகளில் 17 ஊராட்சி தலைவர்கள், 117 ஊராட்சி வார்டுகள், 6 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், சாக்கோட்டை ஒன்றியத்தில் 139 வாக்குச்சாவடிகளில் 26 ஊராட்சி தலைவர்கள், 201 ஊராட்சி வார்டுகள், 11 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், சிங்கம்புணரி ஒன்றியத்தில் 108 வாக்குச்சாவடிகளில், 30 ஊராட்சி தலைவர்கள், 207 ஊராட்சி வார்டுகள், 10 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், எஸ்.புதூர் ஒன்றியத்தில் 79 வாக்குச்சாவடிகளில், 21 ஊராட்சி தலைவர்கள், 150 ஊராட்சி வார்டுகள்,

7 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், திருப்புத்தூர் ஒன்றியத்தில் 152 வாக்குச்சாவடிகளில் 40 ஊராட்சி தலைவர்கள், 276 ஊராட்சி வார்டுகள், 13 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்பட ஆயிரத்து 850 பதவிகளுக்கு 856 வாக்குச்சாவடிகளில் நேற்று தேர்தல் நடந்து முடிந்தது. மாவட்டத்தில் மூன்று நகராட்சி, 12 பேரூராட்சிகள் தவிர மற்ற அனைத்து ஊரகப்பகுதிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் தேர்தல் நடைபெற்ற ஏழு ஒன்றியங்களிலும் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இல்லாமல் தேர்தல் அமைதியாக முடிந்தது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் மைக்ரோ கேமராக்கள் பொருத்தப்பட்டு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது. தேர்தலையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜன.2 அன்று சம்பந்தப்பட்ட ஒன்றியங்களிலேயே நடக்க உள்ளது.

Tags : Elections ,unions ,
× RELATED மக்களவை 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதிகளில்...