×

சைவ பெருமக்கள் பேரவை ஆண்டு விழா

கோவை, டிச. 31: கோவை ரத்தனபுரியில் சைவ பெருமக்கள் பேரவையின் 59வது ஆண்டு விழா நடந்தது. இதற்கு பேரவை தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் கணேசன், கந்தசாமி, நம்பி, விஸ்வநாதன், வெள்ளலூர் வேலாயுதம் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக தலைவர் சுப்பிரமணியம் வரவேற்றார். இதில், செயலாளர் கோவை சுேரஷ், லாலா மாரியப்பன், கணேஷ், மார்க்கெட் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். சைவ திருமண தகவல் பரிமாற்றம் நிகழ்வுகளை குற்றாலம்  முத்துக்குமார சுவாமிகள் துவக்கி ைவத்தார். இதனை தொடர்ந்து திருமண தகவல் பரிமாற்றம் தேவார பாடல் போட்டிகள், விளையாட்டு போட்டிகள், மகளிருக்கான கோலப்போட்டிகள் நடந்தது. இதனை தொடர்ந்து மாலையில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில், கவிஞர் கவிதாசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். வ.உ.சி.யின் திருவுருவ படத்தை சங்கர நாராயணன் தென்காசி திறந்துவைத்தார்.

இதில், மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணன், சண்முகதேவி ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கத்தொகை ரூ.50 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், மத்திய சிறை சாலைக்கு (பார்க்கேட் மேம்பாலம் இடபுறம்) வ.உ.சி சாலை என பெயர் வைக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவிப்பை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Vegetarian Councils Anniversary ,
× RELATED கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்