×

திருவில்லிபுத்தூரில் ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு எஸ்பி பெருமாள் பேட்டி

திருவில்லிபுத்தூர், டிச. 30: திருவில்லிபுத்தூரில் ஒட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என எஸ்பி பெருமாள் தெரிவித்தார்.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்றுள்ளது. இதில் திருவில்லிபுத்தூர் ஒன்றிய பகுதியில் உள்ள 159 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவான 185 வாக்குப் பெட்டிகளை திருவில்லிபுத்தூர் தியகராஜா மேல்நிலைப்பள்ளியில் 2 அறைகளில் வைக்கப்பட்டு தேர்தல் அதிகாரிகள் தலைமையில் அறைகள் சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து டிஎஸ்பி ராஜேந்திரன் கண்காணிப்பில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 எஸ்ஐகள் தலைமையில் 70க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் 4 அடுக்கு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தீயைணைப்பு துறையினரும், துணை வட்டாச்சியர் 2 பேரும், ஊராட்சி ஒன்றிய துணை ஆணையாளர் ஒருவரும் பாதுகாப்பு பணியில் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறை முன்பும் வெளிபுறங்களிலும் 45 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரடியாக கலெக்டர் அலுவலகத்தில் கண்காணித்து வருகின்றனர். வரும் ஜன.2ம் தேதி வாக்கு எண்ணுவதால் அந்தப் பகுதிக்குள் யாரையும் போலீசார் அனுமதிக்காமல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியை எஸ்பி பெருமாள் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்பி பெருமாள் கூறியதாவது: வெம்பக்கோட்டை, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எந்தவித அசம்பாவிதமும் நடக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது’ என்றார்.

Tags : cabin ,SP Perumal ,
× RELATED இன்னும் 24 மணிநேரத்தில் தொழில்நுட்ப...