×

சாக்கோட்டை, கல்லலில் இரண்டாம் கட்ட தேர்தல் களத்தில் 1310 பேர்

காரைக்குடி, டிச.30: காரைக்குடி அருகே சாக்கோட்டை, கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கவுள்ளது.
காரைக்குடி தாலுகாவிற்குட்பட்ட சாக்கோட்டை, கல்லல் ஒன்றியத்துக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட 26 பஞ்சாயத்துகளில் 77,675 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 38,369, பெண்கள் 39,283, இதரர் 23 பேர். இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட  26 ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட 128 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் 35 பேர் வாபஸ் பெற்றுள்ளனர். இதில் 3 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர்.  90 பேர் களத்தில் உள்ளனர். 11 ஒன்றிய கவுன்சில் பதவியில் 5 இடங்கள் ஆண்களுக்கும், 6 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு போட்டியிட 75 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் 18 பேர் வாபஸ் பெற்று 57 பேர் களத்தில் உள்ளனர்.  ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் ஒருவர் வாபஸ் பெற்று  4 பேர் களத்தில் உள்ளனர்.  201 வார்டு உறுப்பினர் பதவிக்கு  485 பேர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் 40 பேர் வாபஸ் பெற்று 445 பேர் போட்டியில் உள்ளனர்.

 மொத்தம் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 599 பேர் களத்தில் உள்ளனர். இதில் 139 வாக்குச்சாவடி மையங்களில் 13 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.  

கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட 44 பஞ்சாயத்துகளில் 78,688 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 40282, பெண்கள் 38406. இதில் 44 ஊராட்சி தலைவர் பதவிக்கு 230 வேட்புமனு தாக்கல் செய்ததில் 52 பேர் வாபஸ் பெற்றனர் 3 பேர் போட்டியின்றி தேர்வு 175 பேர் களத்தில் உள்ளனர்.. 309 ஊராட்சி வார்டு  வார்டு உறுப்பினர் பதவிக்கு 611 பேர் மனுதாக்கல் செய்தனர். 26 பேர் வாபஸ் பெற்றனர். 132 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 453 பேர் களத்தில் உள்ளனர்.  2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 13  பேர் மனுதாக்கல் செய்தனர். 4 பேர் வாபஸ் பெற்றதால் 9 பேர் களத்தில் உள்ளனர்.  16 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 99 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 24 பேர் வாபஸ் பெற, ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தற்போது 74 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்,ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 711 பேர் களத்தில் உள்ளனர். 132 வாக்குச்சாவடி மையங்களில் 6 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை. இந்த ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : phase ,election ,Galle ,
× RELATED 2 கட்ட தேர்தல் முடிந்தும்...