×

பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டது: அமல்படுத்தும் சூழல் தற்போது இல்லை என நீதிபதி கருத்து

சென்னை: ஒகேனக்கல்லில், 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்துக்க 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க  உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி சென்னை நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் வகையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.இந்த நிலையில் காப்பீட்டு நிறுவனங்கள் அமல்படுத்த மூன்று மாத கால அவகாசம் வேண்டும் என்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலை வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தற்போதைய சூழலில் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் காப்பீடு  திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை. எனவே, அந்த உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. அதேசமயம் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை, அரசு கொண்டு வரும் என்று நம்பிக்கை உள்ளது என்று கருத்து தெரிவித்து தமிழக போக்குவரத்து துறை சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்….

The post பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டது: அமல்படுத்தும் சூழல் தற்போது இல்லை என நீதிபதி கருத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sadayappan ,Okanagan ,
× RELATED சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள்