×

உடையார்பாளையம் அருகே ஆட்டோவில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்றவர் கைது

ஜெயங்கொண்டம், டிச. 30: உடையார்பாளையம் அருகே ஆட்டோவில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் பகுதிகளில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் இன்று மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க எஸ்பி சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்படி உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவகுமார், உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சோழன்குறிச்சி பிரிவு சாலை காங்கேயன்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்த கருப்பையன் (51) என்பவர் 400 மதுபாட்டில்களை ஆட்டோவில் பதுக்கி வைத்து அனுமதியின்றி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கருப்பையனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகள் சேர்ப்பது கிடையாது. மாறாக சிறப்பு ரயில்களை ஸ்வீதா கட்டணத்தில் இயக்கி ஆம்னி பஸ்களை போல் காசு பார்க்கிறது. பயணத்தை கடைசி நேரத்தில் 2 அல்லது  3 மணி நேரம் முன் ரத்து செய்தால் கட்டணத்தில் ஒரு ரூபாய் கூட ரயில்வே திரும்ப தருவதில்லை. அதே நேரம் அந்த பர்த்தை கரண்ட் புக்கிங்கில் வேறு ஒரு பயணிக்கு விற்று எடுத்துக் கொள்கிறது.

Tags : Udaiyarpalayam ,
× RELATED உடையார்பாளையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சார கூட்டம்