×

கறம்பக்குடியில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்தால் அபராதம் தாசில்தார் எச்சரிக்கை

கறம்பக்குடி,டிச.30: கறம்பக்குடியில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என தாசில்தார் எச்சரிக்கை விடுத்தார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி பகுதியாக விளங்கி வருகிறது கறம்பக்குடி பேரூராட்சியில் நகர் பகுதியில் உள்கடை வீதி சீனிகடை முக்கம், அம்புக்கோவில் முக்கம் ,பேருந்து நிலையம்,மீன்மார்க்கெட் பகுதி ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன இப்பகுதிகளில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் அமைந்துள்ள கடைகள் வணிக நிறுவனங்களில் கறம்பக்குடி தாலுகா தாசில்தார் சேக் அப்துல்லா தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்ரமணியன் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் உள்கடை வீதி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்கிறார்களா என அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்தனர். மேலும் இச்சோதனையில் தடையை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் மீறி விற்பனை செய்தால் பேரூராட்சியின் மூலம் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மேலும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறி எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வின் போது கறம்பக்குடி வருவாய் ஆய்வாளர் ஸ்டெல்லா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் , கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags : Dasillar ,Karambakkudy ,
× RELATED கறம்பக்குடி பகுதியில் இன்று மின்நிறுத்தம்