×

கந்தர்வகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக கூட்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்

கந்தர்வகோட்டை, டிச.30: கந்தா–்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பழைய கட்டிடம் சேதமடைந்த காரணத்தினால் அந்த இடத்தில் தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்போது தற்காலிகமாக கிராம சேவை மையத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் போதுமானதாக இல்லாத நிலையில் உள்ளது. இந்நிலையில் 8 வருடங்களுக்கு பிறகு ஊரக உள்ளாட்சி தோ்தல் நடைபெற்றுள்ளது. கந்தா–்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு 318 பதவிகளுக்கு முதல் கட்ட தேர்தல் முடிந்துள்ளது. வாக்குகள் எண்ணிக்கை வரும் 2ம் தேதி நடைபெறுகிறது. தோ்தலில் தோ்ந்தெடுக்கப்படும் உறுப்பினா–்கள் 6ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில் கந்தா–்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இடம் பற்றாக்குறையால் கந்தா–்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையா் காமராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் குமரன் ஆகியோரின் அறிவுறுத்தல் படி அலுவலக மாடியில் தற்காலிகமாக கூட்டரங்கு அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. புதிய கட்டிடம் முழுமையாக கட்டி முடித்தப்பிறகு அலுவலகம் மற்றும் கூட்டரங்கு மாற்றி அமைக்கப்படும்.

Tags : meeting room ,union office ,Gandharvagoda ,
× RELATED புழல் ஒன்றிய அலுவலகத்தில் 9 மணி நேரம்...