×

நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் வலியுறுத்தல் தஞ்சை பெரிய கோயிலில் நாயக்கர் கால ஓவியங்களை பாதுகாக்க பைபர் கண்ணாடிகள் அமைக்க முடிவு

தஞ்சை, டிச. 30: தஞ்சை பெரிய கோயிலில் நாயக்கர் காலத்து பழங்கால ஓவியங்களை பழமை மாறாமல் பாதுகாக்க பைபர் கண்ணாடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயில் உலக புகழ்பெற்ற யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும். இந்த கோயில் சிற்பங்கள், சுதைகள், 4 அடி அஸ்திவாரத்தில் 216 அடி உயரம் கொண்ட மூலவர் கோபுரம், அதிலுள்ள 80 டன் கருங்கல், ஒரே கல்லால் நந்தி பகவான், கரூவூரார் சித்தர், 4 அடி அகலம், 8 அடி உயரத்தில் உள்ள வாசலுக்குள் 16 அடி உயரத்தில், 56 அடி சுற்றளவு கொண்ட மூலவர் சிவன் உள்ளிட்டவைகள் உலக புகழ்பெற்றதாகும். இந்த கோயிலுக்கு விஷேச நாட்கள் மட்டுமில்லாமல் தினம்தோறும் 1,000க்கும் மேற்பட்ட வெளிநாடு, வெளிமாநிலம், மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்வர். இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பிப்ரவரி 5ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கோயில் முழுவதும் திருப்பணிகள் நடந்து வருகிறது. கோயிலில் உள்ள சிறிய கோபுரங்களை சோப் ஆயில் மற்றும் ரயாசனத்தை கொண்டு சுத்தம் செய்து சுண்ணாம்பு, கிளிஞ்சல், கடுக்காய் தண்ணீர், சோற்றுக்கற்றாழை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கலந்து பழமை மாறாமல் வடிவமைத்து வருகின்றனர். இதேபோல் கோயிலில் உள்ள விநாயகர், முருகன், பெரியநாயகி அம்மன் சன்னதிகளில் தண்ணீர், ரயாசனத்தை கொண்டு சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் மூலவர் கோபுரம், விநாயகர், முருகன், பெரியநாயகி அம்மன் சன்னதியின் முன்புறமுள்ள மண்டபத்தின் மேல்பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான நாயக்கர் காலத்து ஓவியங்கள் உள்ளன. இதை பாதுகாப்பான முறையில் மெல்லிய பஞ்சால் ஓவியங்கள் மேல் ஒட்டியுள்ள படிமங்களை சுத்தம் செய்கின்றனர். பின்னர் விரைவில் நாயக்கர் காலத்து ஓவியங்களை பாதுகாக்க பைபராலான கண்ணாடி பொருத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கோயில் அலுவலர் ஒருவர் கூறுகையில், பெரிய கோயிலில் மண் மற்றும் செடி, கொடிகளின் சாறினாலான வர்ணம் மூலம் 400 ஆண்டுகளுக்கு முன் புராண கதைகள், அம்மன் வரலாறு, சிவனின் திருவிளையாடல்கள், சிவபுராணம், நால்வர்கள் வரலாறு போன்றவற்றை ஓவியங்களாக வரைந்துள்ளனர். இந்த ஓவியங்களை இயற்கையான முறையில் வர்ணங்களை உருவாக்கி அதை சுவற்றில் பூசும் சுண்ணாம்பு காய்வதற்குள் அந்த வர்ணத்தை கொண்டு ஓவியங்களை வரைந்துள்ளனர். இதனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே பழமை மாறாமல் காட்சியளிக்கும்.

இந்த ஓவியங்களின் சிறப்புகளை பற்றி தெரியாததால் போதிய பராமரிப்பின்றி கோயில் நிர்வாகம் விட்டு விட்டது. இதனால் கரும்புகை, தூசிகள், ஒட்டடைகள் படர்ந்து ஓவியம் இருக்கும் சுவடே தெரியாமல் உள்ளது. கோயில் நிர்வாகம் முறையாக பராமரித்தால் மேலும் பல நூறு ஆண்டுகள் ஓவியங்களை அப்படியே இருக்கும். இதை கருத்தில் கொண்டு அனைத்து பழங்காலத்து ஓவியங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுத்தம் செய்து வருகின்றனர். மேலும் ஓவியங்களை பாதுகாக்க விரைவில் பைபர் கண்ணாடி அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்றார்.

Tags : Consumer Affairs Authority ,TCC ,Piper ,temple ,Tanjore ,
× RELATED நடுக்கடலில் 2 மீனவர்கள் கொலை: நாகையில்...