×

கரம்பை கிராமத்தில் வேளாண் திட்ட பணிகள் ஆய்வு

வீரவநல்லூர், டிச. 30: சேரன்மகாதேவி வட்டாரத்திற்குட்பட்ட கல்லிடைக்குறிச்சியை அடுத்த கரம்பை கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடந்துவரும் வேளாண் திட்ட பணிகளை வேளாண்மை உதவி இயக்குநர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் கீழ் இயந்திர நெல் நடவுப்பணி, நெல் நுண்ணூட்ட உரம் வழங்குதல் போன்ற வளர்ச்சி பணிகள் நடந்தது. தொடர்ந்து விவசாயி ஐயப்பன் என்பவரது வயலில் இயற்கை உரங்களான அங்ககஉரம், இலை வழி ஊட்டம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் வேளாண்மை அலுவலர் ஆனந்தகுமார் பயனாளிகளுக்கு காய்கறி கூடைகளை வழங்கினார்.

இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி, வேளாண்மை துணை அலுவலர் வரதராஜன், உதவி விதை அலுவலர் சுரேஷ்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் கார்த்திகா, கணேசன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கார்த்திகேயன், புவனேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Karambai ,village ,
× RELATED தஞ்சாவூர் அருகே மாட்டுச்சந்தை: 500 மாடுகள் விற்பனை