×

குன்னூர்- ரன்னிமேடு இடையே இயக்கப்படும் சிறப்பு மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

குன்னூர், டிச.29: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், குன்னூரில் இருந்து ரன்னிமேடு பகுதிக்கு கடந்த 24ம் தேதி முதல்  சொகுசு பெட்டிகளுடன் சிறப்பு மலை ரயில் நாள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் பயணிக்க சிறப்பு கட்டணமாக ஒருவருக்கு 470 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த சிறப்பு மலை ரயில் ஜனவரி 19ம் தேதி வரை இயக்கப்படுவதால்  தற்போது அதிகமான சுற்றுலா பயணிகள் இந்த மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பலருக்கு இடம் கிடைக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags : mountain train ,Runnymede ,Coonoor ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...