×

அணைக்கட்டு அருகே புதிதாக போடும் தார்சாலையில் நெடுஞ்சாலை துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு

அணைக்கட்டு, டிச. 29: அணைக்கட்டு அருகே புதிதாக போடும் தார் சாலையில் கழிவுநீர் செல்ல பைப் லைன் அமைக்கும் பணியை பாதியில் நிறுத்தியதால் நெடுஞ்சாலை துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஊசூர் குளத்துமேட்டில் இருந்து சிவநாதபுரம் வரும் செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் ஊசூர், சிவநாதபுரம், அத்தியூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லும் மக்கள் சாலையில் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிவநாதபுரத்தில் இருந்து ஊசூர் குளத்துமேடு வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதில் ஊசூர், தெள்ளூர்பாளையம், வீராரெட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புதிதாக போடப்படும் சாலையை கடந்து பெரிய கால்வாய்க்கு செல்லும் விதமாக பைப் லைன்கள் பொருத்த வேண்டும் என சாலை பணியாளர்களிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே, சாலை போடுவதற்கு முன்னதாக தற்போது பைப் லைன்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது, இதில் ஊசூர் விஏஓ அலுவலகம் எதிரே கழிவுநீர் வெளியேற கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரிய சிமென்ட் பைப் லைன்கள் போடபட்டது, ஆனால் அதிலிருந்து நீர் வெளியேறும் விதமாக இருபுறமும் முழுமையாக பணிகளை முடிக்காமல் சாலை பணியாளர்கள் அறைகுறைாயக விட்டுள்ளனர். இதனால் அதிலிந்து நீர் வெளியேறாமல் தேங்கி உள்ளது.

இதனிடையே நேற்று காலை அங்கு வந்த ஊரக வளர்ச்சி சாலை இளைநிலை பொறியாளர் ஜெயந்தி மற்றும் ஒப்பந்தாரர்களிடம் இதுபோன்று பைப் லைன் பொருத்தும் பணி அறைகுறையாக விட்டால் நீர் எவ்வாறு பைப் லைன் வழியாக வெளியேறும் என புகார் தெரிவித்தனர்.அதற்கு அதிகாரிகள், நீங்கள் கேட்டதற்காக பைப் லைன் போட்டுள்ளோம். அதனை கால்வாயுடன் இணைக்கும் பணியை பிடிஓக்கள் தான் செய்ய வேண்டும். அவர்களிடம் கூறுங்கள் என்றனர். அவர்களிடம் புகார் தெரிவித்தால் நெடுஞ்சாலை துறைவேலை செய்த இடத்தில் நாங்கள் எப்படி வேலை செய்ய முடியும் என மறுக்கின்றனர்.

அதற்கு நாங்கள் ஒண்ணும் செய்ய முடியாது என அலட்சியமாக பதில் கூறியதால் அங்கிருந்த பொதுமக்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : dispute ,highway department ,dam ,darsal ,
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...