×

சேந்தமங்கலம், எருமப்பட்டியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தங்கமணி பிரசாரம்

சேந்தமங்கலம், டிச.29: சேந்தமங்கலம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மின்துறை அமைச்சர் தங்கமணி பிரசாரம் மேற்கொண்டார். சேந்தமங்கலம், எருமப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள  ஊராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, பேளுக்குறிச்சி, வெட்டுக்காடு, துத்திக்குளம், கொண்டப்ப நாயக்கன்பட்டி, எருமப்பட்டி ஆகிய இடங்களில் பிரசார கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி  கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.  அப்போது அவர் பேசுகையில், ‘சேந்தமங்கலம், எருமப்பட்டி ஒன்றியங்களில்,  அதிமுக ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய தாலுகா அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, புதிய சாலைகள்  என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது. எனவே அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் எம்பி சுந்தரம், ஒன்றிய செயலாளர் வருதராஜன், நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Thangamani Premachandra ,AIADMK ,Erumpatti ,Senthamangalam ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...