×

கிறிஸ்துமஸ் கொண்டாட மாமியார் வீட்டுக்கு வந்திருந்த ஐடி பெண் ஊழியர் தற்கொலை

திருச்சி, டிச.27: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட மாமியார் வீட்டுக்கு வந்திருந்த ஐ.டி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருச்சி சுப்ரமணியபுரம் அருளானந்தர் கோயில் தெருவை சேர்ந்த மரிகிருதாபுஷ்பம் மகள் ஜெனீபர்(29). இவரும், திருச்சி கன்டோன்மென்ட் ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த நவீன் என்பவரும் காதலித்து கடந்த 12-11-14ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பி.இ பட்டதாரிகளான இருவரும் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணிபுரிந்து வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக ஜெனீபர் குடும்பத்தினருடன் கடந்த 23ம்தேதி மாமியார் வீட்டுக்கு வந்தனர். நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை சந்தோஷத்துடன் கொண்டாடினர். பின்னர் நவீன் உறவினர் வீட்டுக்கு இனிப்பு கொடுக்க ெசன்றுவிட்டார்.

குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த ஜெனீபர் திடீரென வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றுவிட்டு வந்த நவீன் மற்றும் குடும்பத்தினர் ெஜனீபர் தூக்கில் தொங்குவதை பார்த்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெனிபர் இறந்தார். தகவலறிந்த கன்டோன்மென்ட் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது தெரிந்தது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என கன்டோன்மென்ட் உதவி கமிஷனர் மணிகண்டன் விசாரித்து வருகிறார். மேலும் ெஜனீபருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

Tags : IT girl employee ,mother-in-law ,suicide ,Christmas ,home ,
× RELATED மாமியார் திட்டியதால் மருமகள் தீக்குளிப்பு மருத்துவமனையில் சீரியஸ்