×

தைப்பொங்கல் அறுவடைக்கு செங்கரும்பு தயார் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஆளும்கட்சியினர் பூத் சிலிப் விநியோகம் தேர்தல் விதிமீறல் என குற்றச்சாட்டு

அறந்தாங்கி, டிச.27: அறந்தாங்கி பகுதியில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதிலாக ஆளும்கட்சியினர் வினியோகம் செய்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்றும், வரும் வருகிற 30ம் தேதியும் இரு கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்களுக்கு அவர்களது புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்புகள் மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றன.

இந்த பூத் சிலிப்களை வீடு வீடாக சென்று வழங்கும் பணி சத்துணவு அமைப்பாளர்கள், ஊராட்சி செயலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த பூத் சிலிப்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பணியாளர்கள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு வழங்கும் பூத் சிலிப்புகளை ஆளும் கட்சியினர் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர்.

அமரசிம்மேந்திரபுரம், விஜயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள், சத்துணவு பணியாளர்கள் ஆகியோர் பூத் சிலிப்புகளை வழங்காமல் ஆளும்கட்சியை சேர்ந்தவர்களும், ஆளும்கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் வழங்கி வருகின்றனர். இதுகுறித்து வாக்காளர்கள் அவர்களிடம், வழக்கமாக அலுவலர்கள்தானே பூத் சிலிப் கொடுப்பார்கள் என கேட்டபோது, அதற்கு அவர்கள் பதில் ஏதும் கூறாமல் சென்று விட்டனராம்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன் கூறியது:

வழக்கமாக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப்களை சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்கள்தான் வாக்காளர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால் அறந்தாங்கி ஒன்றியத்தில் விஜயபுரம், அமரசிம்மேந்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆளும்கட்சியினர் பூத் சிலிப்களை வழங்கி வருகின்றனர். இது தேர்தல் விதிகளை மீறிய செயலாகும். எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற மாவட்ட நிர்வாகம் வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய பூத் சிலிப்களை அரசு பணியாளர்கள் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்பதே வாக்காளர்களின் எதிர்பார்ப்பாகும். வழக்கமாக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப்களை சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்கள்தான் வாக்காளர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால் அறந்தாங்கி ஒன்றியத்தில் விஜயபுரம், அமரசிம்மேந்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆளும்கட்சியினர் பூத் சிலிப்களை வழங்கி வருகின்றனர்.

Tags : election ,party ,Booth Chile ,Union Territory of Thangpong ,
× RELATED மோடியின் உத்தரவாதம் தடயம் இன்றி மறைந்தது: ப.சிதம்பரம் விமர்சனம்