×

தரங்கம்பாடியில் சுனாமி நினைவு தின பேரணி நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி

தரங்கம்பாடி, டிச.27: நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் 15ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணியாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பல்லாயிரணக்கான உயிர்களை காவு வாங்கியது. சுனாமி 14ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நாகை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து பேரணியாக புறப்பட்டு நினைவிடத்திற்கு வந்தனர். இதில் பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ், திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து சுனாமியால் இறந்தவர்கள் புதைக்கப்பட்ட நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர்கள் தூவியும், மெழுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் நாகை மாவட்ட உள்ளாட்சி தேர்தல் திமுக பொறுப்பளாரும், தாம்பரம் எம்எல்ஏவுமான ராஜா, சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன், மாவட்ட துணை செயலாளர் தம்பிசத்யேந்திரன், முன்னாள் எம்எல்ஏ அருட்செல்வன், தரங்கம்பாடி நகர செயலாளர் வெற்றிவேல், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.அதைத் தொடர்ந்து சந்திரபாடிக்கு சென்று அங்குள்ள சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, சின்னூர்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களிலும் சுனாமியால் இறந்தவர்களுக்கு அமைதி பேரணியாக சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.

Tags : public ,Tharangambadi ,tsunami commemoration rally ,
× RELATED பைப் லைன் பதிக்க இடம் வழங்கிய...