×

வெங்கமேட்டில் மினிபேருந்துகளால் கடும் போக்குவரத்து நெரிசல்

கரூர், டிச.27: வெங்கமேட்டில் மினிபேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கரூர் வெங்கமேட்டில் சின்னகுளத்துப்பாளையம் பிரிவு சாலையில் பேருந்துநிறுத்தம் உள்ளது. சின்னகுளத்துப்பாளையம் பிரிவுசாலையில்மினி பேருந்துகள் நீண்டநேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீண்டநேரம் நின்று பயணிகளை ஏற்றி இறக்குவதால் பின்னால் வரும் வாகனங்கள் போக வழியில்லை. வாகனங்கள் வரிசை கட்டிநிற்கின்றன. நீண்டநேரம் ஹாரன்அடித்த படியேநின்று கொண்டிருக்கின்றன.

இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கிக்கொள்கின்றன. குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் இவ்வாறு நெரிசல் ஏற்படுவதால் வேலைக்காக செல்பவர்கள் உரிய நேரத்தில் போக முடியாமல் தவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மினிபேருந்துகளை நிறுத்தங்களில் அதிக நேரம் நிற்கவிடாமல் விரைந்து அனுப்பி போக்குவரத்து நெரிசலைப்போக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Venkamat ,
× RELATED வெங்கமேட்டில் துணிகரம் வீ்ட்டு கதவை உடைத்து நகை திருட்டு