வெங்கமேட்டில் துணிகரம் வீ்ட்டு கதவை உடைத்து நகை திருட்டு

கரூர், நவ. 27: கரூர் வெங்கமேட்டில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து இரண்டரை பவுன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் வெங்கமேடு கொங்கு நகரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன்46). கூட்டுறவு சொசைட்டி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அலமாரியில் வைத்திருந்த இரண்டரை பவுன் நகைகளை காணவில்லை. இது குறித்து பரமேஸ்வரன் அளித்த புகாரின்பேரில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>