×

மசினகுடியில் தி.மு.க பொறுப்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி பிரசாரம்

கூடலூர், டிச. 27:  கூடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மசினகுடியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நீலகிரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி வாக்கு சேகரித்தார்.  இதில் ஒன்றிய செயலாளர் அ.லியாகத் அலி தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ திராவிட மணி,  தலைமை செயற்குழு உறுப்பினர் மு.பாண்டியராஜ், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர்கள் ராஜேந்திரன், காசிலிங்கம், இரா.சீனி, ஒன்றிய நிர்வாகிகள் மூர்த்தி, சிரிராஜா, சுப்ரமணியன், காந்தி செல்லதுரை, விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் உத்தமன் நன்றி கூறினார்.

Tags : Pongalur Palanisamy ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி