×

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு

 ஈரோடு, டிச. 27: ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 657 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் சாக்கு பைகளில் கட்டப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த பொருட்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நேற்று நடந்தது.ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 72 வகையான பொருட்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொருட்கள் அனைத்தும் முறையாக வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், வாக்குப்பெட்டிகள் நல்ல நிலையில் உள்ளதா என்பது குறித்தும் அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மாவட்டத்தில், முதல்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பொருட்களை முறையாக கொண்டு சென்று சேர்க்க உத்தரவிட்டார்.

அதன்பின், தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் இருகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்ட தேர்தல் இன்று 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ளது. வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.  பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளில் 3 விதமான பாதுகாப்பு  செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலர்களை கொண்ட மைக்ரோ அப்சர்வர், வீடியோகிராபரை கொண்டு வாக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் மாநில தோதல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலும், கூடுதலாக பதட்டமான வாக்குச்சாவடிகள் இருந்தால் அதை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் 6 பூத்து, 8 பூத்து கொண்ட மையங்கள் உள்ளது. அந்த மையங்களில் கூடுதலாக போலீசாரை நியமிக்கவும், அங்கு வீடியோகிராபரை கொண்டு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் ஆர்.ஓ., அலுவலகங்களில் கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : elections ,
× RELATED மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு...